அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை

அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை
Updated on
1 min read

குவாஹாட்டி: அனைத்து மக்​களுக்​கும் பொது​வான சட்​டங்​களை கொண்டு வர பொது சிவில் சட்​டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வரு​கின்​றன.

உத்​த​ராகண்ட, குஜ​ராத் மாநிலங்​களை அடுத்து அசாம் சட்டப்பேரவை​யில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் ஒரு​வர் ஒன்​றுக்கு மேற்பட்ட திரு​மணம் செய்​தால் 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க​வும், திரு​மணம் செய்​யாமல் ஒன்​றாக சேர்ந்து வாழ்வதைபதிவு செய்​யா​விட்​டால் 3 ஆண்டு சிறை தண்​டனை கிடைக்​க​வும் வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

திரு​மணம், விவாகரத்து போன்​றவற்றை கட்​டா​யம் பதிவு செய்யும் நடை​முறை இதில் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இவற்றை 60 நாட்​களுக்​குள் பதிவு செய்​யா​விட்​டால் ரூ.10,000 அபராதம் விதிக்​கப்​படும். சமூக வழக்​கங்​களை மீறி தடை செய்​யப்​பட்ட உறவுக்​குள் திரு​மணம் செய்​தால் 6 மாதம் வரை சிறை தண்டனையும், ரூ.50,000 அபராத​மும் விதிக்​கப்​படும். ஆனால், பொது சிவில் சட்ட விதி​முறை​கள் மாநில பழங்​குடி​யினருக்கு பொருந்​தாது. இந்த மசோதா ​பேர​வை​யில் விவா​திக்​கப்​பட்டு நேற்று நிறைவற்​றப்​பட்​டது.

இது குறித்து அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: சொத்​துரிமை​யில் அனை​வருக்​கும் நியாய​மான மற்​றும் சம பங்​களிப்பு கிடைப்​பதை உறுதி செய்​யும் வகை​யில் பொது சிவில் சட்​டம் நவீனப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. வாரிசுரிமைக்கான சீரான விதி​கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்​ளது. இதன் மூலம் அசாம் மாநிலத்​தில் உள்​ளவர்​களுக்கு சொத்​துக்​கள் நியாய​மான முறை​யில் மாற்றப்படு​வது உறுதி செய்​யப்​படும்.

உயில் எழு​தாமல் இறப்​பவர்​களின் சொத்​துரிமை​யானது வாரிசுகளுக்கு இடையே சீரான, பாலின சமத்​துவ முன்​னுரிமை வரிசையைப் பின்​பற்​றும். இதில் இறந்​தவரின் மனை​வி, கணவர், குழந்​தைகள் மற்​றும் பெற்​றோர் அடங்​கு​வர். உயில் வழி சொத்துரிமை​யைப் பொறுத்​தவரை, நல்ல மனநிலை​யில் உள்ள எந்​தவொரு முதி​ய​வரும் சாட்​சிகளின் முன்​னிலை​யில் உயிலை எழுதி வைத்து நிறைவேற்ற சட்​டப்​பூர்​வ​மாக உரிமை பெற்றவராவார்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை
எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in