

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து 88 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜல்பைகுரி தொகுதியில் இருந்து தொடர்ந்து 6-வது முறையாக போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக.வில் இணைந்த பிரத்யுத் பர்தோலாய் மற்றும் பூபென் போரா ஆகியோர் முறையே திஸ்புர் மற்றும் பியூரியா தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 22 வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 87 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.