சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய 1,321 சுற்றுலாப் பயணிகளை மீட்டது ராணுவம்

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய 1,321 சுற்றுலாப் பயணிகளை மீட்டது ராணுவம்
Updated on
1 min read

லாச்சென்: வடக்கு சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடும் நிலச்சரிவுகள் காரணமாக சாலைப் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அங்கு சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாச்சென் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சிக்கித்தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகளும், 84 உள்ளூர் மக்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். மங்கன் மாவட்ட ஆட்சியர் அனந்த் ஜெயினின் மேற்பார்வையிலும், ராணுவம், எல்லைச் சாலைகள் அமைப்பு, 'லாச்சென் ஜும்சா' மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்தவர்களின் தீவிர ஒருங்கிணைப்புடனும் இந்த மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளை தரம் சூ பகுதியிலிருந்து சுங்தாங் வரையிலும், அங்கிருந்து தொடர்ந்து காங்டாக்-கும் அழைத்துச் செல்ல, பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தரம் சூ பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சிக்கிம் சமூக நலத்துறை அமைச்சருமான சம்டுப் லெப்சா, ராணுவம் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தொடர் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அவர் சுற்றுலாப் பயணிகளுடனும் கலந்துரையாடி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

"மோசமான வானிலை மற்றும் மீட்பு வாகனங்களை கொண்டு செல்வதில் சவால்கள் இருந்தபோதிலும், குழுப் பணி மற்றும் சமூக உணர்வின் மூலம் இப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது," என்று சம்டுப் லெப்சா குறிப்பிட்டார்.

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய 1,321 சுற்றுலாப் பயணிகளை மீட்டது ராணுவம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை அறிவித்தது ஈரான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in