குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: மீண்டும் சட்டப் போராட்டம் என பில்கிஸ் பானு அறிவிப்பு

குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: மீண்டும் சட்டப் போராட்டம் என பில்கிஸ் பானு அறிவிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: குஜ​ராத் கலவரத்​தின்​போது தன்​னைக் கூட்​டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட இரண்டு குற்​ற​வாளி​களுக்கு உச்ச நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கியதை எதிர்த்து சட்​டப் போராட்​டம் நடத்​தப் போவதாக பில்கிஸ் பானு தெரி​வித்​துள்​ளார். வழக்​கறிஞர் மூலம் பில்​கிஸ் பானு வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், ‘‘ஆயுள் தண்​டனை பெற்ற இரண்டு குற்​ற​வாளி​களுக்கு உச்ச நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கி​யுள்​ளது கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

கடந்த 24 ஆண்​டு​களாக நீதிக்​காகப் போராடிப் பெற்ற வெற்றியை இழந்​து​விட்​டதைப் போல உணரு​கிறேன். குற்றவாளிகள் விடுவிக்​கப்​பட்​டுள்​ள​தால், எனக்​கும் என் குடும்​பத்​தினரின் பாது​காப்​புக்​கும் மீண்​டும் அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளது. இந்த உத்​தரவை எதிர்த்து மீண்டும் சட்டப் போராட்டம் நடத்துவேன்,’’ என்று் தெரி​வித்​துள்​ளார்.

குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: மீண்டும் சட்டப் போராட்டம் என பில்கிஸ் பானு அறிவிப்பு
‘அண்ணன் சீர்’ திட்டத்தில் பயன்பெற தகுதிகள் என்னென்ன? - தமிழக அரசின் வழிகாட்டுதல்கள்

X