7 எம்.பி.க்கள் விலகியதற்கு ஆம் ஆத்மி தலைமையே காரணம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே

Updated on
1 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் நேற்று முன்தினம் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று கூறியதாவது: ஜனநாயகத்தில் அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கும் உரிமை ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு. மூத்த தலைவர்கள் ஏன் கட்சியை விட்டு விலக முடிவு செய்கிறார்கள் என்பது குறித்து, கட்சியின் தலைமைப் பொறுப்பில் (அர்விந்த் கேஜ்ரிவால்) இருப்பவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அவர்கள் (7 எம்.பி.க்கள்) ஏதோ ஒரு சிரமத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். இதற்கு தலைமையின் தவறே காரணம். அந்தக் கட்சி சரியான பாதையில் பயணித்திருந்தால், இவர்கள் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2011-ல் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே</p></div>
எம்.எஸ்.தோனி குணமடைந்து வருகிறார்: பயிற்சியாளர் பிளெமிங் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in