அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,034 கோடி சொத்து முடக்கம்

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,034 கோடி சொத்து முடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.3,034 கோடி மதிப்புள்ள புதிய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமநிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டது மற்றும் நிதியை முறைகேடாக திசை திருப்பியது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.19,344 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை இதுவரை முடக்கியுள்ளது.

இந்நிலையில் புதிதாக ரூ.3,034 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்த சொத்துகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (R-Infra) நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவற்றில் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, மகாராஷ்டிரா மலைவாசஸ்தலமான கண்டாலாவில் உள்ள ஒரு பண்ணை வீடு, அகமதாபாத் சனந்தில் உள்ள சில நிலப் பகுதிகள் மற்றும் ஆர்-இன்ஃப்ரா நிறுவனத்தின் 7.71 கோடி பங்குகள் உள்ளிட்டவை அடங்கும். பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் இந்த சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவை அமலாக்கத் துறை பிறப்பித்துள்ளது.

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,034 கோடி சொத்து முடக்கம்
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in