ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
Updated on: 
1 min read

அமராவதி: அர்னாப், முரசு ஆகிய புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

விவசாய இழப்பு, உயிர்ச் சேதம், பொருட்சேதம் குறித்து இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசினர். கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் உயிர்ச் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். போதிய நிவாரண உதவியை விரைவில் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பிரதமர் மோடி, "அனுபவத்தால் புயலை சரியாக எதிர்கொண்டீர்கள். மின் நிறுத்தம் செய்து கால்நடைகளின் உயிர்களைக் காப்பாற்றியதுடன் சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்துள்ளீர்கள்" என்று பாராட்டினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை என்பதையே இடைக்காலத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது: ஈரான்

X