ஆந்திராவில் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க, சிவகாசிக்கு சென்று ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு

ஆந்திராவில் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க, சிவகாசிக்கு சென்று ஆய்வு நடத்த  அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு
Updated on
1 min read

அமராவதி: பட்டாசு வெடி விபத்​துகளை தடுக்க சிவ​காசிக்கு சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்​கல் செய்​யுங்​கள் என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, அதி​காரி​களுக்கு உத்தரவிட்​டார்.

ஆந்​திர மாநிலம் காக்​கி​நாடா வேட்​ல​பாளை​யம் பகு​தி​யில் கடந்த சனிக்​கிழமை பிப்​ர​வரி 28ம் தேதி பட்​டாசு தொழிற்​சாலை​யில் பயங்கர வெடி விபத்து நடந்​தது. இந்த விபத்​தில் 23 தொழிலாளர்கள் பரி​தாப​மாக உடல் கருகி உயி​ரிழந்​தனர். 9 பேர் ஆபத்​தான நிலை​யில் காக்​கி ​நாடா அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இறந்​தவர்​களின் குடும்​பத்​திற்கு தலா ரூ.20 லட்​சம் நிதி உதவியை ஆந்​திர அரசு அறி​வித்​தது.

மேலும் பிரதமர் தரப்​பில் இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ. 2 லட்​சம் அறிவிக்​கப்​பட்​டது. பாஜக​வின் ஆந்​திர மாநில தலை​வர் மாதவ் தரப்​பில் இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்​கப்​பட்​டது. விபத்து குறித்து முழு விசாரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

சிவ​காசிக்கு செல்​லுங்​கள் இந்​நிலை​யில், நேற்று அமராவ​தி​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில், பட்​டாசு தொழிற்​சாலை விபத்​துகளை எவ்​வாறு தடுப்​பது ? லைசென்ஸ்களை எவ்​வாறு முறைப்​படுத்​து​வது ? தொழிற்சாலைகளுக்​கான நிபந்​தனை​களை எவ்​வாறு வழி வகுப்பது ? விபத்​துகள் நடக்காமல் இருக்க எடுக்க வேண்​டிய நிபந்தனை​கள் என்ன ? என்பது குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் கூறுகை​யில், ”தமிழகத்​தில் உள்ள சிவ​காசி​யில் கோடிக்​கணக்​கில் ஆண்டுதோறும் பட்​டாசுகள் தயாரிக்கப்படுகின்​றன. அங்கு அதி​காரி​கள் குழு சென்று ஆய்வு செய்​யுங்​கள். அங்கு எவ்​வாறு நிபந்​தனை​கள் கடைபிடிக்கப்படுகின்றன ? என்று நேரில் சென்று அறிந்து கொண்டு, அரசுக்கு அறிக்கை தாக்​கல் செய்​யுங்​கள்”​ என உத்தரவிட்​டார்.

ஆந்திராவில் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க, சிவகாசிக்கு சென்று ஆய்வு நடத்த  அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு
திமுகவுடன் புதிய தமிழகம் பேச்சுவார்த்தை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in