

ஆனந்த் மஹிந்திரா (உள்படம்) தொழில திபர் தீரஜ் ஜெயின்
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த இந்திய பயணிகளுக்கு உதவிய இந்திய தொழிலதிபருக்கு, ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க முகாம்கள் மற்றும் விமான நிலையங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் ரத்தால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்தனர்.
அப்போது துபாயில் உள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த தொழில திபர் தீரஜ் ஜெயின், அஜ்மன் பகுதியில் உள்ள 11 படுக்கை அறைகள் கொண்ட தனது பண்ணை வீட்டில், இந்திய பயணிகள் இலவசமாக தங்குவதற்கு அனுமதி அளித்தார்.
தீரஜ் ஜெயினின் விருந்தோம்பலை எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "சமீபத்திய விமான ரத்தால், இந்திய குடும்பங்கள் துபாயில் சிக்கி தவித்தபோது தனது பண்ணை வீட்டை திறந்து விட்டார் தீரஜ் ஜெயின். விருந்தினர்தான் கடவுள் என்ற இந்திய பண்பு, நாம் எங்கு சென்றாலும் வரும் என்பதை இது நினைவூட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.