‘சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் காங்கிரஸ்’ - வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் அமித் ஷா சாடல்

அமித் ஷா

அமித் ஷா

Updated on
2 min read

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்​தி​களை மட்​டுமே பாடு​வது என எடுத்​துள்ள முடி​வின் மூலம், கோடிக்​கணக்​கான சுதந்​திரப் போராட்ட வீரர்​களை காங்​கிரஸ் கட்சி அவம​தித்​து​விட்​ட​தாக மத்​திய அமைச்​சர் அமித் ஷா குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

கடந்த 15-ம் தேதி டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலை​மையகத்​தில், சுதந்​திர தின விழா நடைபெற்றது. இதை முன்​னிட்டு நடை​பெற்ற தேசி​யக் கொடியேற்​றும் நிகழ்ச்​சி​யின்​போது வழக்​கத்​துக்கு மாறாக வந்தே மாதரம் பாடல் முழு​மை​யாக பாடப்​பட்​டது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த சோனியா காந்​தி, வந்தே மாதரம் பாடு​வதை நிறுத்​து​மாறு சைகை காட்​டிய​தாக விமர்​சனம் எழுந்தது.

இந்​நிலை​யில், கோவா​வில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தில், 1937-ம் ஆண்டு மகாத்மா காந்​தி, ஜவஹர்​லால் நேரு, ரவீந்​திர​நாத் தாகூர், சுபாஷ் சந்​திர போஸ் மற்​றும் சர்​தார் வல்​லப​பாய் படேல் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​களின் முன்​னிலை​யில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மானத்​தின்​படி கட்​சி​யின் அனைத்து நிகழ்ச்​சிகளி​லும் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்​தி​கள் மட்​டுமே பாடப்​படும் என முடிவு எடுக்​கப்​பட்​டது.

காங்​கிரஸின் இந்த முடிவை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: காங்​கிரஸ் கட்​சி​யின் செயற்​குழு ஆச்​சரியமளிக்​கும் மற்​றும் தேச​விரோத​மான ஒரு முடிவை எடுத்​துள்​ளது. 1937-ம் ஆண்​டில் அவர்​கள் நிறை​வேற்​றிய தீர்​மானத்​தைப் பின்​பற்​றி, வந்தே மாதரம் என்ற மகத்​தான பாடலின் முதல் இரண்டு சரணங்​களை மட்​டுமே பாட முடிவு செய்​துள்​ளனர்.

சமாதான அரசியல்: 1937-ம் ஆண்​டில் முஸ்​லிம் மக்​களை சமா​தானப்​படுத்​தும் அரசி​யலுக்​காக, வந்தே மாதரத்தை இரண்டு பகு​தி​களாகப் பிரித்து காங்​கிரஸ் கட்சி நாட்​டின் பிரி​வினைக்​கான அடித்​தளத்தை அமைத்​தது என்​பதை நாட்டு மக்​களுக்கு நினை​வூட்ட விரும்​பு​கிறேன். அங்​கிருந்தே ‘இரு நாடு​கள் கோட்​பாடு’ வலுப்​பெற்​று, இறு​தி​யில் நாடு இரண்​டாக பிரிக்​கப்​பட்​டது. பாகிஸ்​தான் உரு​வானது.

அதே வரலாற்​றுப் பிழையை காங்​கிரஸ் மீண்​டும் செய்​து உள்ளது. காங்​கிரஸின் இந்த முடிவு, அவர்​களின் அதிதீ​விர திருப்​திப்​படுத்​தல் கொள்​கையை மட்​டுமே உறு​திப்​படுத்​துகிறது. வாக்கு வங்கி அரசி​யலுக்​காக அவர்​கள் மறைந்த பங்​கிம் சந்​திர சட்​டர்​ஜி​யின் அழி​யாத படைப்பை அவம​தித்​ததோடு மட்​டுமல்​லாமல், வந்தே மாதரம் என முழங்​கியபடி நாட்​டின் சுதந்​திரத்​துக்​காகத் தூக்​குக் கயிற்றை முத்​தமிட்​டும், பல ஆண்​டு​கள் சிறை​யில் வாடி​யும் தி​யாகம் செய்த கோடிக்​கணக்​கான சுதந்​திரப் போ​ராட்​ட வீரர்​களை​யும்​ அவம​தித்​துள்​ளனர்​. இவ்​வாறு மத்திய அமைச்சர் அமித்​ ஷா கூறி​னார்​.

சிந்தனை அடிமைத்தனம்: பட்னாவிஸ்

மும்பை: வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகளை மட்டுமே பாடுவோம் என காங்கிரஸ் செயற்குழு எடுத்துள்ள முடிவு குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கூறியதாவது: இந்தியா இப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இல்லை. எனவே காங்கிரஸின் இத்தகைய முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தியாவின் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரம் உண்டு.

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் எடுத்த முடிவைப் பின்பற்றவில்லை என்றால், அவர்கள் (காங்கிரஸ்) அடிமைத்தனத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகின்றனர் என்பதே அர்த்தம். இதனை நாம் எப்போதும் சிந்தனை அடிமைத்தனம் என்று கூறி வந்தோம். இந்த முடிவின் மூலம் அவர்கள் தங்களின் சிந்தனை அடிமைத்தனத்தையும், அரசியலமைப்புக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி யுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமித் ஷா</p></div>
தொகுதி மறுவரையறைக்கு உறுதிமொழி: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அமித் ஷாவிடம் விஜய் வலியுறுத்தியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in