அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடக்கம்: பாதுகாப்பு குறித்து அமித் ஷா ஆய்வு

அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடக்கம்: பாதுகாப்பு குறித்து அமித் ஷா ஆய்வு
Updated on
1 min read

புது தில்லி: அமர்நாத் யாத்​திரை அடுத்த மாதம் 3-ஆம் தேதி தொடங்​கு​கிறது. இமயமலை​யில் 3,880 மீட்​டர் உயரத்​தில் உள்ள குகைக் கோயிலுக்​கு, 57 நாட்​கள் யாத்​திரை நடை​பெறும்.

பக்​தர்​கள் பஹல்​காம் வழித்​தடத்​தின் மூல​மாக​வும், பால்​தல் வழித்​தடத்​தின் மூல​மாக​வும் பயணிப்​பார்​கள். இந்நிலையில், யாத்​திரைக்​கான பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்த ஆலோ​சனை கூட்​டம் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தலை​மை​யில் டெல்லியில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்​கா, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவே​தி, மற்​றும் சிஆர்​பிஎப் டிஜிபி ஜி.பி.சிங் ஆகியோ​ருடன் மற்ற பாது​காப்பு மற்​றும் நிர்​வாக அதி​காரி​களும் கலந்து கொண்​டனர்.

பக்​தர்​களுக்கு முழு​மை​யான பாது​காப்​பான சூழலை உறுதி செய்​வதற்​காக, மேம்​பட்ட கண்​காணிப்பு தொழில்​நுட்​பம், உளவுத்​துறை அடிப்​படையி​லான கண்​காணிப்பு மற்​றும் பல்​துறை அமைப்​பு​களின் ஒருங்​கிணைப்பு ஆகிய​வற்றை பாது​காப்பு முகமை​கள் ஒன்​றிணைத்து வரு​வ​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஜம்மு காஷ்மீர் போலீ​ஸா​ரும் அதிநவீன சோதனை மற்​றும் நாசவேலை தடுப்பு உபகரணங்​களை நிலைநிறுத்​தி​யுள்​ளனர். யாத்​திரை வழித்​தடத்​தில் பணிபுரி​யும் தொழிலா​ளர்​கள் மற்​றும் வியா​பாரி​களை டிஜிட்​டல் முறை​யில் சரி​பார்ப்​ப​தற்​காக, க்யூஆர் குறி​யீடு அடிப்​படையி​லான "பஹ்​சான் செயலியை" போலீஸார் அறி​முகப்​படுத்​தி​யுள்​ளனர்.

இந்த அமைப்​பானது, சரி​பார்க்​கப்​ப​டாத நபர்​கள் யாத்​திரை பகு​திக்​குள் நுழைவதைத் தடுக்க உதவும். மேலும் தங்​குமிட மையங்​களின் ஆய்​வு​கள் மற்​றும் உளவுத்​துறை நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

சிஆர்​பிஎப் டிஜிபி சிங், காஷ்மீர் பள்​ளத்​தாக்​கிற்கு பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்​ததுடன், முன்​கூட்​டியே தற்​காப்பு நடவடிக்​கைகளை எடுக்​கு​மாறு அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

அசம்​பா​விதங்​கள் இல்​லாத யாத்​திரையை உறுதி செய்ய, பல்​வேறு பாது​காப்பு முகமை​களுக்கு இடையி​லான ஒருங்​கிணைப்​பு வலுப்​படுத்​தப்​பட வேண்​டும்​ என்​றும்​ சிங்​ கூறி​னார்​.

அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடக்கம்: பாதுகாப்பு குறித்து அமித் ஷா ஆய்வு
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in