ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி மீண்டும் பேரவையில் தீர்மானம்

பாஜக, காங்கிரஸ் அமளி
ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி மீண்டும் பேரவையில் தீர்மானம்
Updated on: 
2 min read

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கு தன்​னாட்சி அதி​காரத்​துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்க வேண்​டும் என்று கோரி சட்​டப்​பேர​வை​யில் நேற்று தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

கடந்த 2019-ம் ஆண்டு காஷ் மீருக்​கான சிறப்பு அந்​தஸ்து (சட்டப்பிரிவு 370) நீக்​கப்​பட்​டது. மேலும் ஜம்மு காஷ்மீர், இரு யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டது.

இதன்​படி ஜம்மு காஷ்மீர் சட்​டப்​பேர​வை​யுடன்​கூடிய யூனியன் பிரதேச​மாக​வும், லடாக் பகுதி சட்​டப்​பேரவை இல்​லாத யூனியன் பிரதேச​மாக​வும் உதய​மாகின. கடந்த 2024-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்​தது.

முதல்​வர் உமர் அப்​துல்​லா, ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க வேண்​டும் என்று கோரி வரு​கிறார். இதுதொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் நேற்று சிறப்பு தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதில் 1953-ம் ஆண்​டுக்கு முந்​தைய அரசி​யலமைப்பு அந்தஸ்தை வழங்க வேண்​டும் என்று கோரப்​பட்டு உள்​ளது.

அதாவது பாது​காப்​பு, வெளி​யுறவு கொள்​கை, கரன்சி உள்​ளிட்ட முக்​கிய விவ​காரங்​களை தவிர்த்து இதர அனைத்து துறை​களி​லும் காஷ்மீர் அரசு தன்​னிச்​சை​யாக முடிவு எடுக்க அதி​காரம் வழங்க வேண்​டும் என்று தீர்​மானத்​தில் கோரப்​பட்டு உள்​ளது. மேலும் சட்டப்​பிரிவு 370 மற்​றும் 35-ஐ மீட்​டெடுக்க வேண்​டும் என்​றும் வலியுறுத்​தப்​பட்டு உள்​ளது.

ஜம்மு காஷ்மீருக்​கான மாநில அந்​தஸ்து கோரிக்​கைக்கு பாஜக முழு ஆதரவு தெரி​வித்து உள்​ளது. ஆனால் தன்​னாட்சி அதி​காரம் மற்​றும் சிறப்பு அந்​தஸ்தை மீண்​டும் கோரு​வதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதுதொடர்​பாக பாஜக எம்​எல்​ஏக்​கள் அனை​வரும் நேற்று சட்​டப்​பேர​வை​யின் மையப் பகு​தி​யில் கூடி தீர்​மானத்​துக்கு எதி​ராக குரல் எழுப்​பினர். அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏக்களை வெளி​யேற்ற சபா​நாயகர் அப்​துல் ரஹீம் ரத்​தர் உத்​தர​விட்​டார்.

இதன்பேரில் 4 எம்​எல்​ஏக்​களை​ அவைக் காவலர்​கள் வெளியேற்றினர். இதன்​பிறகு சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

இதுகுறித்து சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் சுனில் சர்மா கூறிய​தாவது: ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்​தில் மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என்று மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா உறுதி அளித்​துள்​ளார். அவர் அளித்த வாக்​குறு​தியை நிச்​ச​யம் நிறைவேற்​று​வார். காஷ்மீருக்கு மாநில அந்​தஸ்து கிடைக்க பாஜக முழு ஆதரவு அளிக்​கிறது.

ஆனால் இதைச் சீர்​குலைக்​கும் வகை​யில் சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. தன்​னாட்சி அதி​காரம் கோரி கடந்த 2000-ம் ஆண்​டில் முன்​னாள் முதல்​வர் பரூக் அப்​துல்லா காலத்​தில் பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தற்​போது அது​போன்ற தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டிருப்​பதை மிக​வும் வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். இது நாட்டு நலனுக்கு எதிரானது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முதல்​வர் உமர் அப்​துல்லா கூறும்​போது, “தீ​விர​வாதம் முழுமையாக ஓய்ந்த பிறகே காஷ்மீருக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என்று மத்​திய அரசு கூறுகிறது. இதை ஏற்க முடி​யாது. உடனடி​யாக மாநில அந்​தஸ்​தை வழங்​க வேண்டும்​” என்​று தெரிவித்​தார்​.

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி மீண்டும் பேரவையில் தீர்மானம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் இழுபறி: 108 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய் விலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in