அனைத்து கட்சி கூட்டத்தை ஏப்.29-ல் நடத்த பிரதமர் மோடியிடம் கார்கே வலியுறுத்தல்

அனைத்து கட்சி கூட்டத்தை ஏப்.29-ல் நடத்த பிரதமர் மோடியிடம் கார்கே வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பிரதமர் நரேந்​திர மோடிக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது:

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் 2023-ம் ஆண்​டில் நிறைவேற்​றப்​பட்​டது. உடனடி​யாக சட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அப்​போதே வலி​யுறுத்​தினேன். சட்​டம் நிறைவேற்​றப்​பட்டு 30 மாதங்​களுக்​குப் பிறகு திடீரென நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டம் கூட்​டப்​படு​கிறது. ஆனால் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் குறித்து எதிர்க்​கட்​சிகளு​டன் எவ்​வித ஆலோ​சனை​யும் நடத்​தப்​பட​வில்​லை.

தற்​போது நீங்​கள் எழு​தி​யிருக்​கும் கடிதத்​தில் தொகுதி மறு​வரையறை குறித்து எந்த தகவலும் இடம்​பெற​வில்​லை. இந்த சூழலில் வரலாற்று சிறப்​புமிக்க மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் குறித்து ஆக்​கப்​பூர்​வ​மான விவாதத்தை நடத்​து​வது சாத்​தி​யமில்​லை. தற்​போது பல்​வேறு மாநிலங்​களில் தேர்​தல் நடத்​தப்​படு​கிறது.

இந்த தேர்​தல்​கள் முடிந்த பிறகு ஏப்​ரல் 29-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்த வேண்​டும். அதில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் தொடர்​பான அரசி​யலமைப்பு சட்ட திருத்​தங்​கள் குறித்து விவா​திக்க வேண்​டும். மகளிருக்​கான இடஒதுக்​கீட்டை அதி​கரிக்க திடீரென நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத்தை கூட்​டி​யிருப்​பது அரசி​யல் ஆதா​யம் தேடும் முயற்சி ஆகும். இவ்​வாறு கார்​கே தெரிவித்துள்ளார்​.

அனைத்து கட்சி கூட்டத்தை ஏப்.29-ல் நடத்த பிரதமர் மோடியிடம் கார்கே வலியுறுத்தல்
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in