மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து மேலும் ஒரு திரிணமூல் எம்.பி. மீது தாக்குதல்

கல்வீச்சு தாக்குதலில் சாலையில் சரிந்து விழுந்த திரிணமூல் எம்பி கல்யாண் பானர்ஜி. படம்: பிடிஐ

கல்வீச்சு தாக்குதலில் சாலையில் சரிந்து விழுந்த திரிணமூல் எம்பி கல்யாண் பானர்ஜி. படம்: பிடிஐ

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து மேலும் ஒரு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தச் சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட திரிணமூல் தொண்டர்களைச் சந்திக்க, அந்த கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம் சோனார்பூருக்கு சென்றார். அப்போது அவர் மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. அவரைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்டு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சண்டிதாலா பகுதியில் நேற்று கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்குத் திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி தலைமை வகித்தார். அப்போது ஒரு பிரிவினர், பேரணியில் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் கல்யாண் பானர்ஜியின் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் தரையில் சரிந்தார். சிஆர்பிஎப் வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் சண்டிதாலா போலீஸ் நிலையம்முன்பு அவர் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறும்போது, “எம்.பி. மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது. அப்படியென்றால் பொதுமக்களின் நிலை என்னவாகும்? மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது’’ என்று தெரிவித்தார்.

திரிணமூல் தலைவர் மம்தா நேரில் சென்று கல்யாண் பானர்ஜியிடம் நலம் விசாரித்தார். பின்னர். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வலுவாக இருக்கிறது. நாங்கள் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றார்.

<div class="paragraphs"><p>கல்வீச்சு தாக்குதலில் சாலையில் சரிந்து விழுந்த திரிணமூல் எம்பி கல்யாண் பானர்ஜி. படம்: பிடிஐ</p></div>
குஜராத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது ஆர்சிபி | IPL Final

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in