6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் மீண்டும் கூட்டணி

முதல்வர் வேட்பாளர் சுக்பீர் சிங் பாதல் என அமித் ஷா அறிவிப்பு
6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் மீண்டும் கூட்டணி
Updated on: 
1 min read

புதுடெல்லி: பஞ்சாபில் சுமார் 6 ஆண்​டுகளுக்​குப் பிறகு பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்​டும் கூட்​டணி அமைத்துள்​ளன. பஞ்​சாபில் சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் கடந்த 1996-ம் ஆண்​டில் கூட்​டணி அமைத்​தன. இரு கட்சிகளும் இணைந்து கடந்த 1997, 2007 மற்​றும் 2012-ம் ஆண்டுகளில் பஞ்​சாபில் கூட்​டணி ஆட்​சியை நடத்​தின.

மத்​தி​யில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யிலும் அகாலிதளம் இடம் பெற்​றிருந்​தது. அந்த கட்​சி​யின் தலை​வர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்​சிம்​ரத் கவுர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்​திய அமைச்​சராகப் பதவி வகித்​தார். வேளாண் சட்​டங்​களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அவர் பத​வியை ராஜினாமா செய்​தார். இதன் தொடர்ச்​சி​யாக இரு கட்​சிகளின் 24 ஆண்டு கால கூட்​டணி முறிந்​தது.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு பிப்​ரவரி​யில் பஞ்​சாப் சட்​டப்​பேரவைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்நிலையில், 6 ஆண்​டுகளுக்​குப் பிறகு பாஜகவும் அகாலிதளமும் மீண்​டும் கூட்​டணி அமைத்​துள்​ளன. இது​தொடர்​பாக மத்​திய அமைச்​சரும் பாஜக மூத்த தலை​வரு​மான அமித் ஷா, அகாலிதளம் தலை​வர் சுக்​பீர் சிங் பாதல் ஆகியோர் டெல்​லி​யில் நேற்று கூட்​டாக நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தனர்.

அப்​போது மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறிய​தாவது: பாஜக கூட்ட​ணி​யில் அகாலிதளம் மிக நீண்ட காலம் நீடித்​தது. சந்​தர்ப்ப சூழல் காரண​மாக கூட்​டணி உடைந்​தது. தற்​போது நாங்​கள் மீண்டும் கூட்​டணி அமைத்து உள்​ளோம். போதைப் பொருளை ஒழிப்​போம் என்ற வாக்​குறுதியை முன்​னிறுத்தி கடந்த 2017-ம் ஆண்​டில் பஞ்​சாபில் காங்​கிரஸ் ஆட்சி அமைத்​தது. இதே வாக்​குறுதியை முன்​னிறுத்தி கடந்த 2022-ம் ஆண்​டில் ஆம் ஆத்மி ஆட்​சி​யைப் பிடித்​தது. ஆனால் இரு கட்​சிகளின் ஆட்​சி​யில் போதைப் பொருள் புழக்​கம் ஒழிக்​கப்​பட​வில்லை.

வரும் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் பாஜக, சிரோமணி அகாலிதளம் கூட்​ட​ணிக்கு மக்​கள் ஆதரவு அளிக்க வேண்​டும். எங்​களது ஆட்சியில் வரும் 2029-ம் ஆண்டு டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் போதைப் பொருள் இல்​லாத பஞ்​சாப் உரு​வாக்​கப்​படும். சட்​டம், ஒழுங்​கும் சீர்​படுத்​தப்​படும். பஞ்​சாப் பேரவைத் தேர்​தலில் எங்​கள் கூட்​டணி வெற்றி பெற்​றால் சுக்​பீர் சிங் பாதல் முதல்​வ​ராகப் பத​வி​யேற்​பார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி வரவேற்பு

பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “தேசிய ஜனநாயக கூட்​டணி குடும்​பத்​தில் அகாலிதளம் மீண்​டும் இணைந்​திருப்​பது மிகுந்கையான கூட்​டணி. வரும் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் பாஜக, அகாலிதளம் கூட்​டணி வெற்றி பெறும் என உறுதி​யாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் மீண்டும் கூட்டணி
உ.பி.யில் காங்கிரஸுக்கு 26 தொகுதி ஒதுக்க சமாஜ்வாதி முடிவு

X