பிரபல நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார்: பிரபலங்கள் இரங்​கல்

பிரபல நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார்: பிரபலங்கள் இரங்​கல்
Updated on: 
1 min read

பனாஜி: பிரபல இந்தி நடிகர் நானா படேகர், மாரடைப்பு காரணமாக கோவா​வில் நேற்று கால​மா​னார். குடியரசு தலை​வர், பிரதமர் மோடி, திரை பிரபலங்​கள் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரிவித்​துள்​ளனர்.

கோவா மாநிலம் டோனா பவு​னா​வில் உள்ள தனது வீட்​டில் வசித்து வந்த நானா படேகருக்கு நேற்று அதி​காலை கடுமை​யான நெஞ்சுவலி ஏற்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மருத்​து​வக்​குழு​வினர் அங்கு விரைந்து சென்​ற​போது, அவர் மயங்​கிய நிலை​யில் இருந்​தார்.

உடனடி​யாக அவரை மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காகக் கொண்டு சென்​றனர். ஆனால் அவர் 5.20 மணிக்கு உயிரிழந்துவிட்ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். நானா படேகரின் மறைவு பாலிவுட் திரை​யுல​கில் சோகத்தை ஏற்படுத்தி உள்​ளது.

இதனிடையே, நானே படேகர் உடல் மகா​ராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள அவருடைய பண்ணை வீட்​டுக்கு கொண்​டு​ செல்​லப்​பட்​டது. அங்​கு, அவரது குடும்​பத்​தினர், அரசி​யல் தலை​வர்​கள், திரை​யுல​கினர், ரசிகர்​கள் உள்​ளிட்​டோர் நேரில் அஞ்​சலி செலுத்​தினர். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு விடுத்​துள்ள இரங்​கல் செய்​தி​யில், “மூத்த நடிகர் நானா படேகரின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்​தேன். அவரது மறைவு இந்​தி​யத் திரை​யுல​கத்​துக்​குப் பேரிழப்​பாகும். அவரது குடும்​பத்​தினருக்​கும் ரசிகர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என கூறி​யுள்​ளார்.

பிரதமர் மோடி விடுத்​துள்ள இரங்​கல் செய்​தி​யில், “இந்தி மற்​றும் மராத்தி திரைப்​படத் துறைக்கு நானா படேகர் ஆற்​றிய பங்​களிப்பு அளப்​பரியது. அவரது மறைவு ஒரு பெரும் வெற்​றிடத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவரது குடும்​பத்​தினர், நண்​பர்​கள் மற்​றும் எண்​ணற்ற ரசிகர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். ஓம் சாந்​தி” என கூறி​யுள்​ளார்.

இது​போல, காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயன், திமுக எம்​.பி.க​னி​மொழி, நடிகர்​கள் ரஜினி​காந்த், அனுபம் கெர், சிரஞ்​சீவி உள்​ளிட்ட அரசி​யல் மற்​றும் திரை​யுலக பிரபலங்​கள் பலர் நானா படேகர் மறைவுக்கு இரங்​கல் தெரி​வித்​துள்​ளார்.

தமிழிலும் நடித்துள்ளார்

முதலில் மேடை நாடகங்​களில் நடித்து வந்த நானா படேகர், பின்னர் மராத்தி படங்​களில் சிறு சிறு வேடங்​களில் நடித்​தார். ‘காமன்’ என்ற படம் மூலம் இந்​தி​யில் அறி​முக​மாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இயக்​குநர் பார​தி​ராஜா ‘பொம்​மலாட்டம்’ (2008) படம் மூலம் அவரை தமிழுக்கு அழைத்து வந்தார். இந்​தப் படம் இந்​தி, தமிழில் உரு​வானது. அடுத்து ரஜினி நடித்த ‘காலா’ (2018) படத்​தி​லும் அவர் நடித்​துள்​ளார். ‘கிரந்​திவீர்’ படத்​துக்​காக சிறந்த நடிகருக்​கான தேசிய விருதை பெற்​றுள்​ளார். 2013-ம் ஆண்டு மத்​திய அரசு பத்ம விருது அளித்து கவுர​வித்​தது.

பிரபல நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார்: பிரபலங்கள் இரங்​கல்
நானா படேகர் என்னும் பெரு நெருப்பு - யார் இந்த மகா கலைஞன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in