பஞ்சாப் பேரவைத் தேர்தல்: 31 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

பஞ்சாப் பேரவைத் தேர்தல்: 31 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
Updated on: 
1 min read

புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைக்கான 31 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 71 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்​சாபில் 117 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்​ரவரி​யில் தேர்​தல் நடைபெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதை​யொட்டி ஆளும் ஆம் ஆத்மி, காங்​கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்​ளிட்ட கட்​சிகள் வேட்​பாளர்​கள் தேர்வு உள்​ளிட்ட பணிகளில் ஈடு​பட்​டுள்​ளன.

இந்நிலையில், 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து 31 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

முதற்கட்ட பட்டியலின்படி, முதல்​வர் பகவந்த் மான், துரி தொகுதி​யில் மீண்​டும் போட்​டி​யிட உள்​ளார். சபாநாயகர் குல்​தார் சிங் சந்த்​வான், கோட்​கபுரா தொகுதி​யில் போட்​டி​யிட உள்​ளார். தற்​போதைய பஞ்​சாப் சட்​டப்​பேரவை​யில் ஆம் ஆத்மி கட்​சிக்கு 94 உறுப்​பினர்​கள் உள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

பஞ்சாப் பேரவைத் தேர்தல்: 31 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

X