ஊழல்வாதிகளின் கையில் சிக்கி உள்ள ஆம் ஆத்மி: ராகவ் சத்தா குற்றச்சாட்டு

ராகவ் சத்​தா

ராகவ் சத்​தா

Updated on
1 min read

புதுடெல்லி: ஆம் ஆத்​மியை சேர்ந்த ராகவ் சத்​தா உள்ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​பிக்​கள் அண்​மை​யில் பாஜக​வில் இணைந்தனர். இது தொடர்​பாக ராகவ் சத்தா சமூக வலை​தளத்தில் நேற்று வெளி​யிட்ட வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நான் பாஜக​வில் இணைந்​ததற்காக சிலர் வாழ்த்​துகளை தெரிவித்து வரு​கின்​றனர். நான் எதற்​காக பாஜக​வில் இணைந்தேன் என்று சிலர் கேள்வி எழுப்பி வரு​கின்​றனர். நான் அரசி​யலில் இணைவதற்கு முன்​பாக ஆடிட்​ட​ராக பணி​யாற்றி வந்தேன். அந்த துறை​யில் எனக்கு வளமான எதிர்​காலம் காத்திருந்​தது.

ஆனால் நான் எனது ஆடிட்​டர் பணி​யைத் துறந்து அரசி​யலில் இணைந்​தேன். ஆம் ஆத்​மி​யின் நிறுவன தலைவர்களில் ஒரு​வ​ராக பணி​யாற்​றினேன். சுமார் 15 ஆண்டுகாலம் கட்​சிக்​காக ரத்​தம், வியர்வை சிந்தி உழைத்​தேன்.

ஆனால் தற்​போது ஆம் ஆத்​மி​யில் நச்​சுத்​தன்மை வாய்ந்த சூழல் நில​வு​கிறது. என்னை பணி​யாற்​ற​வி​டா​மல் தடுத்​தனர். அதோடு நாடாளு​மன்​றத்​தில் பேச விடா​மலும் தடுத்​தனர். சில ஊழல்வாதிகளின் கையில் ஆம் ஆத்மி சிக்​கி​யிருக்​கிறது.

இந்த கட்சி தற்​போது மக்​களுக்​காக பாடு​பட​வில்​லை. சிலரின் சொந்த நலனுக்​காக மட்​டுமே ஆம் ஆத்மி பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. எனவேதான் பாஜகவில் இணைந்தேன்.இவ்​வாறு ராகவ்​ சத்​தா தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>ராகவ் சத்​தா</em></p></div>
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in