Published : 30 May 2023 07:54 AM
Last Updated : 30 May 2023 07:54 AM

இந்திய வரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த 2004-ம் ஆண்டு நடந்த ஹாக் பயிற்சி விமான கொள்முதலின் போது, இந்திய அதிகாரிகளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 1 மில்லியன் பவுண்ட் லஞ்சம் வழங்கியது, இங்கிலாந்தின் எஸ்எப்ஓ (முறைகேடு தடுப்பு பிரிவு அலுவலகம்) விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், அதன் முன்னாள் இந்திய இயக்குனர், ஆயுத டீலர்கள் சுதிர் சவுத்ரி, பானு சவுத்திரி, பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம் ஆகியவற்றின் மீது சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்தது.

இந்திய விமானப்படையில் 123, ஹாக் 115 ரக நவீன பயிற்சி விமானங்களும், கடற்படையில் 17 ஹாக் விமானங்களும் உள்ளன.இந்த விமானங்களை பிரிட்டிஷ்மல்டி நேஷனல் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தயாரிக்கிறது. மொத்தம் 66 ஹாக் பயிற்சி விமான கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அமைச்சரவை குழு கடந்த 2003-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது. 24 ஹாக் பயற்சி விமானங்களை 734.21 மில்லியன் பவுண்ட்டுக்கு வாங்கவும், தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் கூடுதலாக 42 ஹாக் விமானங்களை இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனத்தில் 308.247 மில்லியன் டாலர் மதிப்பில் தயாரிக்கவும் கடந்த 2004-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குனராக இருந்தவர் டிம் ஜோன்ஸ். இந்த கொள்முதலில் இடைத்தரகர்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்க கூடாது என்பது விதிமுறை.

இந்த கொள்முதலில் ஹாக் பயிற்சி விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமக் கட்டணம் 4 மில்லியன் பவுண்டிலிருந்து 7.5 மில்லியன் பவுண்டாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதற்காக 1 மில்லியன் பவுண்ட் லஞ்சம் மற்றும் கமிஷனாக இந்திய வரி அதிகாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதை தடுப்பதற்காக இந்திய வரி அதிகாரிகளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது

இங்கிலாந்து எஸ்எப்ஓ அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஊழலில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இந்திய இயக்குனர் டிம் ஜோன்ஸ், ஆயுத டீலர்கள் சுதிர் சவுத்திரி, பானு சவுத்திரி மற்றும் பிரிட்டிஸ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் (பிஏஇ) நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தவிர கடந்த 2008-10-ம் ஆண்டுகளில், மேலும் 57 ஹாக் விமானங்களை எச்ஏஎல் நிறுவனத்தில் ரூ.9.502.68 கோடியில் தயாரிக்க தனியாக ஒப்பந்தம் ஒன்றையும் பிஏஇ செய்துள்ளது. ஒப்பந்த விதிமுறைகளையும் மீறி இந்திய வரி அதிகாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் லஞ்சம் வழங்கிய விவகாரம் கடந்த 2012-ல் ஊடகங்களில் வெளியானது. இதன் அடிப்படையில் இங்கிலாந்து எஸ்எப்ஓ அமைப்பு இது குறித்து விசாரணை நடத்தியது. ஹாக் விமானங்களை இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரிப்பதற்கான உரிம கட்டணத்தை 4 மில்லியன் பவுண்ட்டிலிருந்து 7.5 மில்லியன் பவுண்ட் உயர்த்தியதற்காக இந்திய வரி அதிகாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் 1 மில்லியன் பவுண்ட் லஞ்சம் கொடுக்கப்பட்டது உறுதியானது இதையடுத்து முன்னாள் இந்திய இயக்குனர், ஆயுத டீலர்கள் சுதிர் சவுத்திரி, பானு சவுத்திரி, பிரிட்டிஸ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம் ஆகியவற்றின் மீது சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்தது.

மிக் விமான ஊழல்

இது தவிர ஆயுத டீலராக இருந்த சுதிர் சவுத்திரிக்கு ‘போர்ட்மவுத்’ என்ற கம்பெனி இருப்பதும் எஸ்எப்ஓ விசாரணையில் தெரியவந்தது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மிக் ரக போர் விமானங்களை வாங்கியபோது, ரஷ்ய ஆயுதநிறுவனங்கள் சுதிர் சவுத்திரி நிறுவனத்தின் சுவிஸ் வங்கி கணக்கில் 100 மில்லியன் பவுண்ட் பணம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x