

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பை குரியிலிருந்து அசாம் மாநிலத்தின் குவாஹாட்டிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இது வடகிழக்கு பகுதியில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.
மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியிலிருந்து, அசாம் மாநிலத்தின் குவாஹாட்டிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ரயிலை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா,மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வடகிழக்கு பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதில் மத்தியில் இருந்தமுந்தைய அரசுகள் முன்னுரிமை அளிக்கவில்லை. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. அனைத்து பிரிவுகளிலும் போக்குவரத்து இணைப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
சுற்றுலாவை ஊக்குவிக்கும்: தற்போது தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சுற்றுலாவை ஊக்குவிக்கும். நியூஜல்பைகுரி - குவாஹாட்டி இடையேஉள்ள 407 கி.மீ தூரத்தை ஐந்தரை மணி நேரத்தில் கடந்துவிடலாம்.
வடகிழக்கு பகுதிகளுக்கான ரயில்வே பட்ஜெட் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014-ம்ஆண்டுக்கு முன் வடகிழக்கு பகுதிகளுக்கான ஆண்டு ரயில்வே பட்ஜெட் சுமார் ரூ.2,500 கோடியாகஇருந்தது. தற்போது அது ரூ.10,000கோடியாக அதிகரிக்கப்பட்டுள் ளது. கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு பகுதி முழுவதும் ரயில்வேபோக்குவரத்து விரிவடைந்துள் ளது. வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் ரயில் போக்குவரத்து மூலம் விரைவில் இணைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இது தவிர அசாமில் 182 கி.மீ தூரத்துக்கு மின்மயமாக்கப்பட்ட ரயில் போக்குவரத்து வழித்தடத் தையும், லும்டிங் என்ற இடத்தில் ரயில் என்ஜின் பணிமனையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் ரயில் மூலம் இணைக்கப்படும்.