

கடந்த 24-ஆம் தேதி பிஹாரில் நடந்த வாக்குப்பதிவில், 30 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு, 3-ஆம் கட்டமாக, பிஹாரில், சுபால், பூர்ணியா, அராரியா, கிஷன்கஞ்ச், கத்திஹார், பகல்பூர் மற்றும் பாங்கா ஆகிய தொகுதிகளில் நடந்தது.
இதில் கத்திஹாரில் இருக்கும் 22 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர், பாஜகவின் நிகில் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் பிரகாஷ் மாத்தோ ஆகியோருக்கு எதிராக போட்டியிடுகிறார்.
மீதமுள்ள வாக்குச்சாவடிகளில், 6 பாங்கா பகுதியிலும், 2 சுபால் பகுதியிலும் உள்ளன. கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லக்ஷ்மண், "இந்த விஷயத்தில் இறுதி முடிவை தேர்தல் ஆணையம் எடுத்த பிறகு, மறுவாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்படும்" என்றார்.