வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வால் மகிழ்ச்சி: ஏழைகளுக்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்- பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து

வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வால் மகிழ்ச்சி: ஏழைகளுக்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்- பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து
Updated on
2 min read

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் அம்சங்கள் குறித்து பல தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:

நல்ல அம்சங்கள்

ஜி.லட்சுமிபதி, தனியார் நிறுவன மேலாளர்:

தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி விலக்கு, 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை, ஜவுளி தொழிலுக்கு ரூ.220 கோடி என பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க விஷயங்கள் நிறைய உள்ளன.

ஏமாற்றம் அளிக்கிறது

பி.உதயசங்கர், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்:

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக்கியிருப்பது நல்ல விஷயம். இதைத்தாண்டி ஏழை எளியவர்கள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பரவலாக எல்லோருக்குமே வீட்டுக் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கங்கை நதிக்கு ஒதுக்கி யதுபோல, மற்ற நதிகளை சுத்தம் செய்யவும் நிதி ஒதுக்கவேண்டும்.

சாப்ட்வேருக்கு முக்கியத்துவம்

தேவ், சாப்ட்வேர் ஊழியர்:

சாப்ட்வேர் துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோரை அரசு ஊக்குவிக்கும் என்று கூறப்பட் டுள்ளது நல்ல விஷயம்.

ஜெயந்தி, அரசு ஊழியர்:

பெண்களின் பாதுகாப்புக்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளனர். இதை அதிகப்படுத்தியிருக்கலாம். டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கு மேலாண்மை மையம் அமைப்பதுபோல, மற்ற நகரங்களிலும் அமைக்க வேண்டும். பெண் பாதுகாப்பை பள்ளிகளில் பாடமாக வைப்பதும் நல்லது.

பிரெய்லி பயிற்சி தேவை

செல்வராஜ் (பார்வையற்றவர்),

சுயதொழில்: பார்வையற்றோர் வசதிக்காக பிரெய்லி பணம் அச்சடிக் கப்படும் என்று கூறப்படுகிறது. பார்வையற்றவர் எல்லோருக்கும் பிரெய்லி முறை தெரியுமா என்பது சந்தேகம். எனவே, அவர் களுக்கு இதுகுறித்து பயிற்சி அளிக்கவேண்டும்.

மின்சாரத்துக்கு மாற்று வழி

மணிகண்டன், மார்கெட்டிங் ஊழியர்:

சிகரெட் வரியை அதிகப்ப டுத்தியதால் விலை அதிகரிக்கும். இது நல்ல விஷயம். இதேபோல மது வகைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். சூரிய மின் சக்திக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை பராமரிப்பது சவாலான விஷயம். எனவே மின் பிரச்சினையை தீர்க்க வேறு வழி காணவேண்டும்.

அறிவித்தால் போதாது..

சுந்தர், கல்லூரி மாணவர்:

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த ‘திறன் இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத் தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்களுக்கும் பயனுள்ள வகையில் இதை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நிறைய அறிவிப்புகள் உள்ளன. அவற்றை சீக்கிரம் செயல்படுத்தினால் உண்மை யில் பாராட்டத்தக்க விஷயம்.

அரிசி விலையை குறைங்க

தாட்சாயிணி, இல்லத்தரசி:

சோப்பு, செருப்பு, டிவி விலை குறையும் என்கிறார்கள். மகிழ்ச்சி தான். அதே நேரம், அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க புதிய அரசு முயற்சி செய்ய வேண்டும்.

சின்னக்கண்ணு, விவசாயி:

பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு கூலி ஆட்கள், உரம் போன்றவற்றுக்கு அதிகம் செலவாகிறது. எனவே கூடுதலாக நிதி ஒதுக்கினாலும் தவறில்லை. விவசாயக் கடனுக்கு ரூ.8 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன். நதிகளை இணைக்க ஆய்வு செய்கிறேன் என்று இழுத்தடிக் காமல், அதற்கான வேலைகளை உடனே தொடங்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in