

புதுடெல்லி: மணிப்பூரில் வெவ்வேறு இனக் குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள வணிகர்கள் ஏப்ரல் மாதத்திற்கான கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-3பி மற்றும் ஜிஎஸ்டிஆர்-7 ஆகிய பிரிவுகளில் மாதாந்திர ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை இம்மாதம் இறுதி வரை அதாவது மே 31-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐசி உத்தரவிட்டுள்ளது.