ஆக்ராவில் யோகி ஆதித்யநாத்: தாஜ்மஹால் பகுதியில் சுத்தம் செய்தார்

ஆக்ராவில் யோகி ஆதித்யநாத்: 
தாஜ்மஹால் பகுதியில் சுத்தம் செய்தார்
Updated on
1 min read

தாஜ்மஹால் பற்றி பாஜகவினர் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வரும் சூழலில், அங்கு சென்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள தாஜ்மஹால், காதலின் அடையாளச் சின்னமாக போற்றப்படுகிறது.

ஆனால், இது அடிமைச் சின்னம், இந்து கோவிலின் மீது கட்டப்பட்டது என பாஜக தலைவர்கள் கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தாஜ்மஹால் இந்தியத் தொழிலாளர்களால் உருவான சின்னம் எனக் கூறி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சையைத் தணித்தார்.

இந்நிலையில், அவர் இன்று ஆக்ரா சென்றார். தாஜ்மஹாலில் உள்ள ஷாஜஹான், மும்தாஜ் கல்லறைகளை பார்வையிடுவதுடன், பூங்காவை ஆய்வு செய்தார்.

பின் பாஜக தொண்டர்களுடன் இணைந்து, தாஜ்மஹால் பகுதியில் சுத்தம் செய்தார். நல திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in