

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்காவை சேர்ந்தவர் சந்தான மூர்த்தி (46). அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது முகநூல் பதிவில் கூறியதாவது:
கர்நாடகாவில் இருந்த முதல்வர்களிலேயே அதிகமாக கடன் வாங்கியது சித்தராமையா தான். ஆனாலும் இலவச திட்டங்களை அவர் அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அவரது தவறான நிதிக் கொள்கையால் அரசின் கடன் அதிகரிக்கிறது என விமர்சித்திருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளை மீறி ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக ஆசிரியர் சந்தானமூர்த்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.