Published : 22 Oct 2017 05:38 PM
Last Updated : 22 Oct 2017 05:38 PM

பலத்த விமர்சனங்களுக்கிடையே குஜராத்தில் படகு சேவையை மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கோகாவில் இன்று இரு கடல்நகரங்களுக்கிடையே படகுப் போக்குவரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

குஜராத்தின் சௌராஷ்டிரா மண்டலத்தில் உள்ள கோகாவிலிருந்து தெற்கு குஜராத்தில் உள்ள தாஹெஜ்க்கு செல்லும் இப்படகு போக்குவரத்தின் முதல்கட்ட சேவை இன்று தொடங்கியது. அதிநவீன அம்சங்கள் நிறைந்த இத்திட்டத்திற்கான செலவு ரூ.615 கோடி.

விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ''இந்தியாவில் மட்டுமல்லாமல், தென்கிழக்கு ஆசியாவிலும், இதுபோன்ற திட்டத்தின் முதல் அம்சமாக இது அமைந்துள்ளது. இந்த படகு சேவையை சாத்தியமாக்குவதற்கு அரசாங்கம் சமீபத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. இது ஒரு தனித்துவமான திட்டமாகும்" என்று கூறினார்.

நிகழ்ச்சியில், மாநில முதல்வர் விஜய் ரூபனி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் பாவ் நகர், வதோதாரா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் ரூ.1,140 கோடி செலவிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப்போட்டு வரும் தேர்தல் ஆணையம், குஜராத்தில் இலவச திட்டங்களை பிரதமர் அறிவித்த பின்னரே அறிவிக்கும் என எதிர்க்கட்சிகள் பலமாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் குஜராத் சென்று திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x