

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவைச் சேர்ந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் துருக்கியில் இருந்து திரும்பியிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பு சந்தேகிக்கிறது.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், "கேரள மாநில கண்ணூரில் இருந்து 3 இளைஞர்களை கைது செய்துள்ளோம். அவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவர்கள் மூவரும் அண்மையில்தான் துருக்கியில் இருந்து திரும்பியிருப்பார்கள் என்ற சந்தேகமும் உள்ளது.
கண்ணூர் துணை காவல் கண்காணிப்பாளர் பி.பி.சதானந்தன் தலைமையிலான குழு அந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
விசாரணை வளையத்துக்குள் உள்ள அந்த இளைஞர்கள் வல்லபட்டனம், சக்கரக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய போலீஸார் அவர்களது பெயர் மற்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.