லாரி மீது கார் மோதி மணப்பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு

லாரி மீது கார் மோதி மணப்பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள நார்சிங் எனும்இடத்தில் நேற்று காலை சாலை ஓரத்தில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த லாரி மீது அந்த வழியாக வந்த கார் மோதியதில் காரில் பயணம் செய்த சகோதரிகளான ஹர்ஷிதா (26), அங்கிதா (28) மற்றும் நிதின் (26) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

அம்ருத் (27) என்பவர் மட்டும் கச்சிபவுலி எனும் இடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் அங்கிதாவிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரை வில் திருமணம் ஆகவிருப்பதால், ஓட்டலில் ‘பேச்சுலர்ஸ் பார்ட்டி’ நடத்த முடிவு செய்து, அலுவலகத்தில் பணியாற்றும் 7 பேர் ஒரே காரில் அசைவ சிற்றுண்டி சாப்பிட சென்றுள்ளனர். அப்போது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in