

ஹைதராபாத்: உத்தர பிரதேச மாநில நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மல்கான் - சுனிதா தம்பதியினர் தமது சோட்டு (8) எனும் மகனுடன், தெலங்கானா மாநிலம், ஹனுமகொண்டா மாவட்டம், காஜிபேட்டா ரயில்வே நிலையத்திற்கு வந்தனர்.
இவர்கள் குடும்பத்துடன் அஜ்மீர் செல்ல திட்டமிட்டிருந்தனர். இரவு என்பதால் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பூங்காவில் தங்கினர். மறுநாள் காலை இவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு சற்று தள்ளி சிறுவன் சோட்டு விளையாட சென்றுள்ளான். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், சிறுவன் சோட்டுவை சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளன. இதில், சிறுவன் சோட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தெலங்கானாவில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் நாய்கள் கடித்து உயிரிழப்பு ஏற்படுவது இது 2-வது முறை எனமக்கள் புகார் கூறுகின்றனர்.