ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோயிலுக்கு வெளியே சுமார் 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோயிலுக்கு வெளியே சுமார் 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
Updated on
1 min read

திருமலை: கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்காக நேற்று காலை கோயிலுக்கு வெளியே நாராயணகிரியை தாண்டி சிலா தோரணம் வரை பக்தர்கள் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு காத்துகிடந்தனர். இதனால், சுவாமியை தரிசிக்க 36 மணி நேரம் வரை ஆனது.

புதன்கிழமையன்று சுவாமியை 79,207 பேர் தரிசனம் செய்தனர். இதில் 41.427 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். உண்டியல் மூலம் ரூ. 3.19 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால், பக்தர்களுக்கு வரிசையிலேயே உணவு, குடிநீர், மோர் ஆகியவை தேவஸ்தான நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

திருப்பதியில் புகழ்பெற்ற கோவிந்தராஜ பெருமாள் கோயில்விமான கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்றதையொட்டி, வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது. 25-ம்தேதி புதிய தங்க கோபுரத்திற்குகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன. இதனையொட்டி கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் கோவிந்தராஜர் கோயிலில் பிரம்மோற்சவம் 26-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அங்குரார்பண நிகழ்ச்சிகள் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளதுஎன தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in