

அமராவதி: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 23 கூலி தொழிலாளர்கள் ஷேர் ஆட்டோவில் ஆந்திராவின் பல்நாடு மாவட்டம், புலிபாடு கிராமத்துக்கு நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தாச்சேபல்லி மண்டலம், பொண்டுகல கிராமம் அருகே, எதிரில் வேகமாக வந்த லாரி ஷேர் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டார்.