திருமண ஊர்வலத்தில் கார் தாறுமாறாக ஓடியதில் ஒருவர் உயிரிழப்பு - காயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை

திருமண ஊர்வலத்தில் கார் தாறுமாறாக ஓடியதில் ஒருவர் உயிரிழப்பு - காயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை
Updated on
1 min read

வதோதரா: திருமண ஊர்வலத்தில் தாறுமாறாக கார் ஓடி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம், வகோடியா போலீஸ் சரகத்துக்குள்பட்ட திரானமி ஃபலியா பகுதியில் அமைந்துள்ளமண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு வந்திருந்தவர் கள் திருமண மண்டபத்துக்கு வெளியே நள்ளிரவு 2 மணியளவில் நடனமாடிக் கொண்டிருந்தனர். மேலும் திருமண வரவேற்பு ஊர்வலமும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது மணமகனை ஏற்றி வந்த கார், தாறுமாறாக ஓடி நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் மீதுமோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.

இதில் மணமகனின் அத்தைசம்பா மக்வானா (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 9 பேரும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காரை நிறுத்துவதற்கு பிரேக்கைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை தவறாக மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் காரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிவிட்டார்.

இதையடுத்து போலீஸார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அவரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in