கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமனம்

பிரவீன் சூட்
பிரவீன் சூட்
Updated on
1 min read

புதுடெல்லி: கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நேற்று நியமிக்கப்பட்டார்.

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் 25-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.

இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மத்திய பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சுதிர் சக்சேனா மற்றும் பஞ்சாப் ஐபிஎஸ் அதிகாரி தின்கர் குப்தா ஆகிய 3 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் இப்போது கர்நாடக மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) உள்ள பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் நேற்று மாலை பிறப்பித்தது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.

ஐஐடி-டெல்லி பட்டதாரியான பிரவீன் சூட், 1986-ல் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர்மிகவும் திறமையாக செயல்பட் டுள்ளார். குறிப்பாக, 2004 முதல் 2007 வரையில் மைசூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய இவர், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2018 முதல் கர்நாடக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in