

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று கூறியதாவது: எங்களை தனிபெரும்பான்மை யுடன் அமோக வெற்றி பெற வைத்த கர்நாடக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது கூட்டுத் தலைமைக்கு கிடைத்த வெற்றி ஆகும். நாங்கள் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். அடுத்த முதல்வரை கட்சி மேலிடத் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.