கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி: பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி | கோப்புப் படம்
பிரியங்கா காந்தி | கோப்புப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு இந்தியாவை ஒன்றிணைத்த அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் -128 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 128 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. பாஜக இதுவரை 60 இடங்களில் வெற்று பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதனால், கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில் வெற்றி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசும்போது, “காங்கிரஸுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆணையை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி. இது உங்கள் பிரச்சினைகளுக்கு கிடைத்த வெற்றி, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததன் வெற்றி. இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காக கடினமாக உழைத்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் கடின உழைப்பு சிறந்த பலனைத் தந்தது. மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் அயராது பாடுபடும்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in