குறைந்து வரும் கோவிட் | இந்தியாவில் 20,000-க்கும் கீழ் சென்ற மொத்த பாதிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,690 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,613 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 1,690 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 21,406 லிருந்து 19,613 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 12 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,736 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பிலிருந்து 3,469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,25,250 ஆக உயர்ந்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in