மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களின் முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களின் முக்கிய அம்சங்கள்
Updated on
1 min read

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று மக்களவையில் மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் சார்ந்த திட்டங்களின் முக்கிய அம்சங்கள்:

சூரிய சக்தி மூலம் மின்திட்டம்:

* தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பொன்னேரியில் அதிநவீன நகரம்

தமிழ்நாடு, கர்னாடகா, ஆந்திர மாநிலங்களில் அதிநவீன நகரங்கள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை அருகே பொன்னேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் அதி நவீன நகரம் ஏற்படுத்தப்படும்.

* சென்னை - விசாகப்பட்டிணம் - பெங்களூரூ - மும்பை தொழில் நுட்ப வழித்தடங்கள் விரைவில் நிறைவு பெறும்.

மிகப் பெரிய ஜவுளிப் பூங்கா

* தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தில் மைசூர் உட்பட எட்டு நகரங்களில் மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு நிதி

* நாடு முழுவதும் 16 புதிய துறைமுக திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். தூத்துக்குடி துறைமுக திட்டத்திற்காக ரூ.11,635 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புனித தலங்களின் மேம்பாடு

* தமிழகத்தின் புனிதத் தலங்களான காஞ்சிபுரம், வேளாங்கண்ணி நகரங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட, நாட்டின் 5 புனிதத் தலங்களில் 'ஹிருதய்' திட்டம் செயல்படுத்தப்படும். சுற்றுலாவையும் நமது கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரியில் வயதானவர்களுக்கு தேசிய நிலையம்

காசநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறியவும் தரமான சிகிச்சை அளிப்பதற்கும் வயதானவர்களுக்கான இரு தேசிய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். ஒன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரியிலும், மற்றொன்று புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியிலும் ஆரம்பிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in