கேரளாவில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் பலி

படகு கவிழ்ந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணி
படகு கவிழ்ந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணி
Updated on
1 min read

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் 16 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று (ஞாயிறு) மலப்புரத்தின் தானூர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.

உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். மாலை 6.30 மணி அளவில் படகு கவிழந்து உள்ளது. முன்னதாக, கேரள மாநில அமைச்சர் அப்துர் ரஹ்மான், படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். இருந்தும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் 16 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளன.

இந்த படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களை காக்க முடியவில்லை என படகில் இருந்து உயிர் தப்பிய ஷஃபிக் தெரிவித்துள்ளார். மீட்பு படையினருடன் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in