பிஹாரில் 1.23 கோடி 100 நாள் வேலை அட்டை ரத்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாட்னா: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 2005-ல் அமலுக்கு வந்தது. கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்க இந்த திட்டம் வகை செய்கிறது.

இந்த திட்டம் குறித்து பிஹார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் நேற்று கூறியதாவது: பிஹாரில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 626 அட்டைகள் இருந்தன. இவற்றை ஆய்வு செய்ததில் கடந்த பல ஆண்டுகளாக 1 கோடியே 23 லட்சத்து 13 ஆயிரத்து 927 அட்டைகள் செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது.

இவற்றில் சில போலியானவை அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என தெரியவந்தது. மேலும் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து இதுபோன்ற அட்டைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மாநிலம் முழுவதும் 23.07 லட்சம் பேருக்கு புதிதாக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022-23 நிதியாண்டில் 1.26 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in