பள்ளிகளில் சிறுதானிய உணவுகள் வழங்க உ.பி. அரசு முடிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

லக்னோ: இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறு தானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்தது. இந்நிலையில் சிறுதானியங்களை பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கும் முயற்சியில் உத்தர பிரதேச அரசு இறங்கியுள்ளது.

உ.பி. பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் கோதுமை, அரிசி உணவுகள், காய்கறிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இனிமேல் மதிய உணவில் வாரத்துக்கு ஒரு நாள் சிறு தானிய உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை நிறைவேற்ற 62,000 டன் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை இந்தியஉணவுக் கழகத்துக்கு உத்தரபிரதேச மாநில அரசு அனுப்பி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in