Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

பரமேஷ்வருக்கு கர்நாடக துணை முதல்வர் பதவி?: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் ‘செக்’

கர்நாடகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வருக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் தன்னிச்சையான செயல்பாடுகளை தடுப்பதற்காக இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜி.பரமேஷ்வர் வேளாண் துறை யில் முனைவர் பட்டம் பெற்றவர். கர்நாடகத்தில் 2008 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பிறகு, கட்சியின் மாநிலத் தலைவ ராக நியமிக்கப்பட்டார். 2013 சட்ட மன்ற தேர்தலை இவரது தலைமை யின் கீழ் தான் காங்கிரஸ் சந்தித்தது.

1989-ல் இருந்து 2004-வரை 4 முறை தும்கூர் சட்டமன்ற தொகுதி யில் வெற்றிபெற்ற பரமேஷ்வர், 2013-ல் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிபெற்றால் இவர் தான் அடுத்த முதல்வர் என்று ஊடகங்கள் எழுதின.

இந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற போதிலும், எதிர்பாராதவித மாக பரமேஷ்வர் தோல்வி அடைந்தார்.

இதற்கு சித்தராமையா ஆதர வாளர்களின் உள்ளடி வேலையே காரணம் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.

எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

இந்நிலையில் சித்தராமையா முதல்வரான பிறகு வீரப்ப மொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா, மல்லிகார்ஜூன கார்கே, ஜி.பரமேஷ்வர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களை அவர் கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் தனது விருப்பப்படி செயல் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கட்சியின் மூத்த உறுப்பினர்களும், பெரும்பாலான எம்எல்ஏக்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இருப்பினும் சித்தராமையா வுக்கு எதிராகவும், பரமேஷ்வருக்கு ஆதரவாகவும் கட்சியில் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்நிலையில் கர்நாட கத்தில் துணை முதல்வர் பதவி உருவாக்க கட்சி மேலிடம் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக மேலவை உறுப்பின ராக பரமேஷ்வர் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.

அப்போது பரமேஷ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்க கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சனிக்கிழமை பெங்களூரில் பேசிய முதல்வர் சித்தராமையா, “எனது தலைமை யிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் துணை முதல்வர் பதவி தேவையில்லை. கட்சியில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை. ஆதலால் துணை முதல்வர் பதவி அவசியமற்றது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x