Published : 22 Sep 2017 08:58 AM
Last Updated : 22 Sep 2017 08:58 AM

இந்தியா வர தாவூத் விருப்பம் மத்திய அரசுடன் பேச்சு: ராஜ் தாக்கரே தகவல்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இந்தியா திரும்ப விரும்புவதாகவும் இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே பேசியதாவது:

தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இந்தியா திரும்ப விரும்புகிறார். அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு முடங்கிவிட்டார். தனது கடைசி நாட்களை இந்தியாவில் கழிக்க விரும்புகிறார். இதற்காக மத்திய அரசுடன் தாவூத் பேச்சு நடத்தி வருகிறார்.

ஆனால், அவர் இந்தியா திரும்புவதை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த பாஜக திட்டமிடுகிறது. ‘தலைமறைவாக இருந்த இப்ராகிமை நாங்கள்தான் இந்தியா கொண்டு வந்தோம்’ என்று தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் செய்து தவறான முறையில் பாஜக ஆதாயம் அடையப் பார்க்கிறது.

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தால் தேவையற்ற பணச் செலவு ஏற்படும். இதனால் மகாராஷ்டிராவுக்கு எந்த பலனும் இல்லை. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x