

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடை விதித்தது.
நாடு முழுவதிலும் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, அவற்றின் முக்கிய நிர்வாகிகள் 108 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இத்தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அமைப்பினருக்கு எதிரான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, பிஹார், உ.பி., பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.