

டேராடூன்: உத்தராகண்ட் மாநில அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்கள், யாத்திரைக்கு முன்னதாக உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான மருத்துவப் பரிசோதனையுடன் மருத்துவப் பரிசோதனை படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அறிவுரையை சார்தாம் பக்தர்கள் பொருட்படுத்து வதில்லை.
இந்த அலட்சியத்தால் யாத்திரையின் இரண்டாவது நாளில் யமுனோத்ரி கோயிலில் 2 பக்தர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டனர். இவ்வாறு உத்தராகண்ட் அரசின் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.