பிரதமரின் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி: மாணவர்கள் பரிந்துரை வழங்க யுஜிசி அழைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பிரதமரின் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சியையொட்டி, மாணவர்கள் பரிந்துரைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக யுஜிசி செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-ல் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும், அகில இந்திய வானொலிமூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வரும் ஏப்.30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பு மிக்கதாகவும், நீண்டகாலம் நினைவில் நிற்கும் வகையிலும் யோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்குமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, பரிந்துரைகளை வழங்க விரும்பும் பொதுமக்கள், மத்திய அரசின் https://www.mygov.in என்ற இணையதளத்தில் 30 நொடிகளுக்கு மிகாமல் பரிந்துரைகளை பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகையில், பதாகைகள் மற்றும் விளம்பர அட்டைகளின் வடிவமைப்புகள் https://drive.google.com/drive/folders/1Hj-75_Nymhg6an_H5yq8zR7A-1bZhWS0 என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன. இவற்றை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி, கல்லூரி வளாகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்து பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, அதிக அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் பரிந்துரைகளை வழங்கஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in