'60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு' - ஆதார் பூனாவாலா தகவல்

ஆதார் பூனாவாலா
ஆதார் பூனாவாலா
Updated on
1 min read

புதுடெல்லி: தற்போது 60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கோவோவாக்ஸ் தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்லாமல் 130 நாடுகளுக்கு தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிலையில் வைரஸ் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து சீரம் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது.

இதனிடையே நாட்டில் மீண்டும் கரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆதார் பூனாவாலா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸின் திரிபு, தீவிரமானதாக இல்லை. அவ்வளவாக பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் நிறுவனத்திடம் 60 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த இரண்டு அல்லது 3 மாதங்களில் மேலும் 60 லட்சம் தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறைந்த பாதிப்பு

தற்போது பரவி வரும் வைரஸால் குறைந்த அளவே பாதிப்பு உள்ளது. எனவே முதியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு ஆதார் பூனாவாலா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in