

கன்னட அமைப்புகள் காசை வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என நான் கூறவில்லை.கம்யூனிஸ்ட்டுகள் தான் வெறுமனே கொடியை தூக்கிக்கொண்டு போராடுவார்கள்.அப்புறம் காணாமல் போய்விடுவார்கள் என்றுதான் கூறினேன், என நித்யா னந்தா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
அதனை ஏற்காத கன்னட அமைப்புகள் புதன்கிழமை பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர். அப்போது நித்யானந்தாவை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.
சாமியார் நித்யானந்தாவை கைது செய்து ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என கடந்த திங்கள்கிழமை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன் றம் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கில் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டு இருப்பதால் தனிப்படை போலீஸார் அவரை கைது செய்ய ஹரித்து வாருக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே புதன்கிழமை, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் 'தியான பீடம்' ஆசிரமத்திற்கு வெளியே 100-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கஸ்தூரி கன்னட வேதிகே அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நித்யானந்தாவின் உருவப்படத்தை கொளுத்தி, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே ரமேஷ் கவுடா செய்தியாளர்களிடம் பேசும் போது, “கன்னடர்களும் கன்னட அமைப்புகளும் காசை வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள். சில கன்னட அமைப்பு களின் தொண்டர்கள் 300 ரூபாய் வாங்கிக்கொண்டு 3 மணி நேரம் கூச்சல் போடுவார்கள்.அதன்பிறகு காணாமல் போய்விடுவார்கள் என நித்யானந்தா பேசியிருக்கிறார்.
கன்னடர்களை அவமானப்படுத்தி பேசியுள்ள வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி யுள்ளது. எங்களைக் கேவலப்படுத்திய நித்யானந்தாவை கர்நாடகாவை விட்டு துரத்தாமல் விடமாட்டோம். நாங்கள் யார் என்பதை அவருக்கு புரிய வைப்போம்.
ஏழை கன்னடர்களின் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டி, கோடி கோடியாய் கொள்ளையடித்து வருகிறார்.
இந்து மதத்தையும், அதன் கலாச் சாரத்தையும் கேவலப்படுத்தும் நித்யா னந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்; கர்நாடகாவை விட்டு வெளியேற்ற வேண்டும்” என்றார்.
தனிப்படை போலீஸார் தேடிவரும் நிலையில் நித்யானந்தா புதன் கிழமை கன்னட அமைப்புகளின் போராட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,''நான் கன்னட அமைப்பினரை விமர்சிக்க வில்லை. சிறுவயதில் திருவண்ணா மலையில் இருக்கும் போது கொடியை தூக்கிக்கொண்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகளை தான் திட்டினேன்.
50 பேர் கூட்டமாக கூடி அதுவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொடியை தூக்கிக் கொண்டு தொழில் ரீதியாக போராட்டம் நடத்துவர்கள். வாரத்தின் 7 நாட்களும் ஏதாவது ஒரு பிரச் சினைக்காக கூச்சல் போடுவார்கள். ஒரு பிரச்சினை முடிவதற்குள் இன்னொரு பிரச்சினைக்கு தாவி விடுவார்கள். அவர்களுடைய குறிக்கோள் பணம் தான். பணம் பட்டுவாடா செய்யப்பட்டப் பின் காணாமல் போய்விடுவார்கள்.
இதனை நான் திருவண்ணா மலையில் பார்த்திருக்கிறேன். அதைத்தான் கூறினேன். ஆனால் கன்னட தொலைக்காட்சிகள் தவறாக வெளியிட்டுள்ளனர். கன்னட மக்களை என்னுடைய மக்களாக கருதுவதால் ஒருபோதும் அவர்களை பற்றி தவறாக பேசமாட்டேன்'' என விளக்கம் அளித்துள்ளார்.