

புதுடெல்லி: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 11 பேருக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர் நீதிமன்றம் குறைத்தது.
தண்டிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவர்களின் மனு கடந்த 2018 முதல் நிலுவையில் உள்ளது. தண்டனை கைதிகளில் பலர் ஜாமீன் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இவர்களில் 8 பேருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்த 8 பேரும் 17 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.