இந்தியாவில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று: நேற்றைவிட 20% அதிகம்

இந்தியாவில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று: நேற்றைவிட 20% அதிகம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும்.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோவிட் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை: 12,591

தற்போது நாடு முழுவதும் கோவிட் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 65286

கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை: 10,827

இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை: 44,857,992 (4.48 கோடி)

இதுவரை கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்தோரின் எண்ணிக்கை: 44,261,476

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 29

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 5,31,230

இதுவரை நாடு முழுவதும் 2,20,66,28,332 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

XBB.1.16: இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in