Last Updated : 03 Sep, 2017 02:12 PM

 

Published : 03 Sep 2017 02:12 PM
Last Updated : 03 Sep 2017 02:12 PM

மத்திய அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு: பாதுகாப்பு அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்; பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித் துறை இணை அமைச்சர் கூடுதல் பொறுப்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (செப்டம்பர் 3-ம் தேதி) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர்:

நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் அமைச்சர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத் துறையை கூடுதலாக சில காலம் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இலாகாக்கள் விவரம்:

இன்று பதவி ஏற்றவர்களில் ஏற்கெனவே இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, பியூஸ் கோயலுக்கு ரயில்வே, சுரேஷ் பிரபுவுக்கு வர்த்தகம், தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே வகித்துவந்த பெட்ரோலியத்துறையோடு திறன் மேம்பாட்டுத்துறையையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன் ராதாகிருஷ்ணனுக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த பொறுப்புகளோடு நிதித்துறை (இணை)யும் வழங்கப்பட்டுள்ளது.

ஜேட்லி, ராஜ்நாத், சுஷ்மாவுக்கு அதே பொறுப்பு:

ஏற்கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அதே பொறுப்பை தொடர்வார் என்றும் அதைப்போல ராஜ்நாத் சிங் (உள்துறை) மற்றும் சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ஏற்கெனவே அவர்கள் கவனித்து வந்த துறைகளில் நீடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர்

இலாகா

நிர்மலா சீதாராமன்

பாதுகாப்பு

பொன்.ராதாகிருஷ்ணன்

நிதித்துறை (இணை அமைச்சர்)

சுரேஷ் பிரபு

வர்த்தகம்

ஹர்தீப் பூரி சிங்

வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறை (தனிப்பொறுப்பு)

ஆனந்த்குமார் ஹெக்டே

திறன் மேம்பாட்டுத் துறை

ராஜ்குமார் சிங்  

மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை (தனிப்பொறுப்பு)

கிராஜ்சிங் 

சிறு குறு, நடுத்தரத் தொழில் துறைஅமைச்சர் தனிப்பொறுப்பு

அல்ஃபோன்ஸ்  கண்ணன்தனம் 

சுற்றுலாத் துறை தனிப்பொறுப்பு

சந்தோஷ்குமார் கங்குவார் 

தொழிலாளர்த்துறை தனிப்பொறுப்பு

மகேஷ் சர்மா

கலாச்சாரத்துறை தனிப்பொறுப்பு

உமா பாரதி

குடிநீர் மற்றும் சுகாதாரம்

நிதின் கட்காரி

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை; நீர் ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிராக்கம்

ராஜ்யவர்தன் ரதோர்

(இணை) இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு

(தனிப்பொறுப்பு) தகவல் ஒளிபரப்புத்துறை

முக்தார் அப்பாஸ் நக்வி

சிறுபான்மையினர் நலம்

ஷிவ் பிரதாப் சுக்லா

நிதித்துறை (இணை)

அஷ்வினி குமார் சவுபே

சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் (இணை)

வீரேந்திர குமார்

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி; சிறுபான்மையினர் நலன் (இணை))

கஜேந்திர சிங் ஷெகாவத்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம்

சத்ய பால் சிங்

மனித வள மேம்பாடு; மற்றும் நீர் ஆதாரம், நதி மேம்பாடு

வீரேந்திர குமார்

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி; சிறுபான்மையினர் நலன் (இணை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x